
மந்திரமாவது நீறு
திருச்சிற்றம்பலம்

மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள் து நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருவால வாயான் திருநீறே. 1
வேதத்தி லுள் து நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
பாதந் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
வுண்மையி லுள் து நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
திருவால வாயான் திருநீறே. 2
முத்தி தருவது நீறு
முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
தக்கார் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு
திருவால வாயான் திருநீறே. 3
காண வினியது நீறு
கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம்
பெருமை காடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு
மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு
திருவால வாயான் திருநீறே. 4
பூச வினியது நீறு
புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு
பெருந்தவத் தார்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு
அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திருவால வாயான் திருநீறே. 5
அருத்தம தாவது நீறு
அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு
வான மளிப்பது நீறு
பாருத்தம தாவது நீறு
புண்ணியர் பூசும்வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த
திருவால வாயான் திருநீறே. 6
எயிலது வட்டது நீறு
விருமைக்கு முள் து நீறு
பயிலப் படுவது நீறு
பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு
சுத்தம தாவது நீறு
அயிலைப் பாலிதரு சூலத்
தால வாயான் திருநீறே. 7
இராவணன் மேலது நீறு
வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு
பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு
தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி
யால வாயான் றிருநீறே. 8
மாலா டயனறி யாத
வண்ணமு முள் து நீறு
மேலுறை தேவர்கள் தங்கண்
மெய்யது வெண்பாடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு
மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம்
மால வாயான் றிருநீறே. 9
குண்டிகைக் கையர்க ளோடு
சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு
கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார்
ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து
மால வாயான் றிருநீறே. 10
ஆற்ற லடல்விடை யேறு
மால வாயான்றிரு நீற்றைப்
பாற்றிப் புகலி நிலாவும்
பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற
தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும்
வல்லவர் நல்லவர் தாமே. 11